கிராமப்புற மாணாக்கர்களுக்கு குறைந்த கல்வி கட்டணத்தில் தொழிற்கல்வி வழங்குதல், சிறந்த தொழிற்பயிற்சியாளர்களை உருவாக்குதல்
என்ற நோக்கத்தின் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரத்தில் பி.ஏ.சி ராமசாமி ராஜா தொழிற்பயிற்சி நிலையம் ஆகஸ்ட் 2010 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
வெல்டர், இன்ஸ்ருமெண்ட் மெக்கானிக்,பிட்டர், எலக்ட்ரீசியன் ஆகிய நான்கு தொழிற்பிரிவின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.பயிற்சியின் முடிவில்
அகில இந்திய தொழிற்தேர்வு நடத்தப்பட்டு மத்திய அரசின் தேசீய தொழிற் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் பொறியியல், பாலிடெக்னிக்
படித்த மாணாக்கர்களை விட அதிக வேலைவாய்ப்பினை பெறுபவர்கள் ஐடிஐ முடித்த பயிற்சியாளர்களே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இந்நிலையில்
தாங்கள் ஐடிஐ படிப்பினை தேர்ந்தெடுத்தற்கு வாழ்த்துக்கள்……
முதல்வர்